முக்கியச் செய்திகள் தமிழகம்

திக்குமுக்காடும் திருப்பூர்-நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

தவிக்கும் தலைநகரம், சென்னையில் பாதுகாப்பான ஷாப்பிங், மாமதுரை அவலங்கள் ஆகிய பெயர்களில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் இறங்கியது. அதைத் தொடர்ந்து திக்குமுக்காடும் திருப்பூர் என்ற பெயரில் இன்று திருப்பூரில் நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

திருப்பூர் ஆளாங்காடு பகுதியில் “சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீர், வீடுகளுக்கு உள்ளேயும் செல்லும் அவலம், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீரை விரைந்து அகற்றி மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தென்னம்பாளையம் பகுதியில், “உழவர் சந்தையில் சேரும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்களின் வருகை குறைவு. வியாபாரம் மந்தம், புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை விரைந்து திறக்க வேண்டும்” என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுபூலுவப்பட்டி பகுதியில் 14 ஆண்டுகளாக நடைபெறும் பாலப் பணிகளால் சேதமடைந்த சாலைகள், விபத்து ஏற்படும் அபாயம், மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்று நியூஸ்7 தமிழ் வாயிலாக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று

Arivazhagan Chinnasamy

231 நாட்களுக்கு பின்னர் குறைந்த கொரோனா பாதிப்பு

Halley Karthik

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக!

G SaravanaKumar