மதுரை கோயில் நிர்வாக இணையதளம் முடக்கம்-பக்தர்கள் அவதி

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டதால்  பக்தர்கள் அவதிப்பட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரப்பூர்வ இணையதளம்
முடக்கப்பட்டதால்  பக்தர்கள் அவதிப்பட்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும்
லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள்.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அறிந்து
கொள்ளும் வகையில் செயல்பட்டு வந்த http://www.meenakshitemple.org அதிகாரப்பூர்வ
இணையதளம் நேற்று முதல் திடீரென முடங்கியுள்ளது.


இந்த இணையதளத்தில் கோயில் திருவிழா கோயிலின் வரலாறு கோயில் சிறப்பு, சிறப்புக்
கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இந்த
இணையதளத்தில் இடம் பெற்றிருந்த நிலையில், கோயில் இணையதளம் முடங்கியதன் காரணமாக வெளி மாநிலம், வெளி நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோயில் இணையதளம் முடங்கியதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.