முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை, மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகிறார்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியான “தமிழ் பாரம்பரியம் மற்றும்
இந்திய மொழிகள் வாரம்” என்ற நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காரைக்கால் அம்மையார் தினம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில், முதல் முறையாக பெண் துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ், பழமையான மொழி. இங்கு பயிலும் மற்ற மொழி பேசும் மாணவர்கள் தமிழையும் கற்றுக்கொள்ள வேண்டும். தேனை போன்று தமிழ் இனிமையானது. எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ , அங்கெல்லாம் நாங்கள் இருப்போம். அது டெல்லியாக இருந்தாலும் சரி. காசியாக இருந்தாலும் சரி” என்று பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, “தமிழ் கலாச்சாரம் குறித்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி. காசிக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதை , அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நமது தமிழ் கலாச்சாரத்தின் இணைப்பை பார்த்து தெரிந்து கொள்கின்றனர். அதேபோல டெல்லியில் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் மூலம், மற்ற மொழி பேசும் மாணவர்களும் தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முடியும்.

மாநிலத்திற்கு உள்ளேயே தமிழின் பெருமையை பேசுவதை விட , மற்ற மாநிலங்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துச் செல்லும்போது மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழை கற்கும் ஆசை வரும். நாமும் பிற மொழிகளை கற்க வேண்டும். நம் தமிழ் மொழியை மற்றவர்களும் கற்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

உலக சாஸ்திரங்கள் எல்லாம், தமிழ் மொழியில் வேண்டும் என மகாகவி கேட்டது போல, நாம் மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, மொழியின் அவசியம் உணர்ந்து, அவரவர்க்கு எந்த மொழி தேவையோ, அதை கற்க அனைவருக்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை, மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகிறார்கள். அது தவறு. நம் இனிப்பான தமிழ் மொழியை அனைவரும் கற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுற்றுச் சூழலை பாதுகாத்து வரும் இந்தியாவின் பசுமை மனிதர்

G SaravanaKumar

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்!

Halley Karthik

சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய இருவருக்கு இரட்டை ஆயுள்

Halley Karthik