முக்கியச் செய்திகள் சினிமா

வெளியானது துணிவு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம்; ரசிகர்கள் உற்சாகம்

துணிவு படத்தின்  ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம்  படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஹச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ’துணிவு’. இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். தற்போது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Chilla Chilla’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பை பெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தற்போது ’துணிவு’ படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தமிழகம் உட்பட இந்தியாவிலும் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் துணிவு படம் அமெரிக்கா, பிரிட்டன் நாட்டில்  ஜனவரி 11ஆம் தேதி  வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.  மேலும்,  ’துணிவு’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் துணிவு படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதால்   திரையரங்கு போஸ்டர்கள், டிக்கெட்டுகளில் துணிவு படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் திரைப்படங்கள் சில ஆண்டுகளாக ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுவதில்லை. கடைசியாக 2014ஆம் ஆண்டு ஜில்லா, வீரம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வரும் 2023 பொங்கல் சமயத்தில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

விஜய், அஜித் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதையே அவர்களது ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள். பொங்கல் திருவிழாவின்போது வெளியாகினால் அதனை எப்படி கொண்டாடுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாரிசு, துணிவு திரைப்படங்களை முன்வைத்து இப்போதே சமூக வலைதளங்களில் விஜய், அஜித் ரசிகர்களின் போர் தொடங்கிவிட்டது.

இதனிடையே பொங்கலுக்கு துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், வாரிசு திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில், “அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. துணிவு படத்திற்கு 500க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகின்றன. ஆனால் இதுவரை எந்த படத்திற்கும் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது:தமிழக அரசு

Halley Karthik

ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

G SaravanaKumar

கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

Arivazhagan Chinnasamy