சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில், கழிவு நீர் கால்வாயில் முழங்கால் அளவு சகதியில் நின்று பணி செய்து, கை மற்றும் கால்களை கழிவுநீரில்
சுத்தம் செய்யும் அவல நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட, மார்க்கெட் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கழிவுநீரானது, சிறிய கால்வாய் மூலமாக வந்து பிரதான கால்வாய் வழியாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை கடந்து செல்கிறது. இதில் வீட்டு கழிவு நீர், குளியல் நீர் ஆகியவை கலக்கிறது. இந்த கால்வாயில் மழைக்கு சகதிகள் நிரம்பி, கழிவு நீர் செல்ல முடியாமல் தேக்கம் அடைவதும், சாலையில் வாழிந்தோடுவதும் வாடிக்கையாகி போய்விட்டது.
இதனை தடுக்க மணலி பகுதியில் இருக்கும் நபர்களை கூலிக்கு அழைத்து வந்து ஒரு பக்கம் இடுப்பளவு சகதி, மறுபுறம் கழிவுநீர் வழிந்தோடும் நிலையில் இருக்கும் கால்வாயில், எந்தவித உபகரணமும் அவர்களுக்கு வழங்காமல் மண்வெட்டியில் அள்ளி அண்ணக்கூடை யின் மூலமாக அப்புறப்படுத்த செய்துள்ளது.
மேலும், கொடூரத்தின் உச்சமாக பணி முடிந்து செல்லும் அப்பணியாளர்கள் தங்கள்
கை, கால்கள், உடைகளை அங்கு வழிந்தோடும் கழிவும் நீரில் கழுவும் அவலம்
அரங்கேறியது.
எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்து நவீன உபகரணங்கள் இருக்கும் நிலையில், மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதில் தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் என அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கு. பாலமுருகன்








