கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேப் சாலையில்,
நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், உள்ள கேப்
ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. மலை சரிந்து சாலையில் கல் விழுந்தது. மேலும், இந்த வழியாக போக்குவரத்தை தவிர்க்க வேண்டுமென, இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரிய பாறை மற்றும் மண் துண்டுகள் சாலையில் உள்ளதால், போக்குவரத்து
முற்றிலும் நிறுத்தப்பட்டது. இது தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த ஆண்டும் இதுபோன்ற பல இடங்களில்
நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தாலும், மழைக்
காலங்களில் மண்சரியும் அபாயகரம் தொடர்கிறது. மேலும், சாலையில் விழுந்த
மண், பாறைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
கு. பாலமுருகன்







