மதுரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் தனது பெற்றோரிடம் தொடர்ந்து இந்தியில் பேசி காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை விமான நிலையம் மூலமாக விமான பயணம் மேற்கொள்வதற்காக வந்த நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்கள் வந்தபோது அவர்கள் கொண்டு வந்த உடமைகள் அடங்கிய கை பையில் நாணயம் இருந்ததால் ஸ்கேனர் செய்யும்போது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தப் பையில் உள்ள நாணயங்களை அகற்றுமாறு மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் இந்தியில் கூறவே, அதற்கு சித்தார்த்தின் பெற்றோர்கள் இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அந்த பதிவை டெலிட் செய்தது குறிப்பிடத்தக்கது.