முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்னிபாத் என்று ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆள் எடுக்கின்றனர் – நாஞ்சில் சம்பத்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபாத் என்ற பெயரில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கூறி ஆர்.எஸ்.எஸ். வேலைக்கு ஆள் எடுப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திமுக திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தில் திமுக ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபாத் என்ற பெயரில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கூறி ஆர்எஸ்எஸ்க்கு வேலைக்கு எடுகிற வேலையை மத்திய அரசு செய்வதாக குற்றம்சாட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அக்னிபாத் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேர்க்கும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது நிலைமைகள் கேள்விகுறியாகும் என்ற அவர், லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டம் பெற்று விட்டு ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் கனவில் மத்திய அரசு கல் எரிந்து விட்டது என்றார்.

 

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டதால் பிரச்சனைகளை திசைதிருப்ப மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது என கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லை என்று வித்தாரம் பேசிய எடப்பாடி பழனிசாமி இன்று அடியாட்கள் மாவட்ட செயலாளரை கூட்டத்தில் பேச வைத்து ஒற்றை தலைமை என்று பேசி அத்துமீறுகிறார். ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை,பொதுப்பணித்துறையில் பல்லாயிரம் கோடி ஏப்பம் விட்டவர் எடப்பாடி பழனிசாமி. இன்று அதிமுக கட்சியை எம்ஜிஆருக்கு அறிமுகம் இல்லாதவர் கட்சியை கைப்பற்ற நினைப்பதாக சாடினார்.

அதிமுகவில் அதிகாரபூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி ஆயுத்தம் ஆகி வருவதற்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றச்சாட்டினார். வலிமை வாய்ந்த அதிமுகவில் பாஜக ஊடுருவி கட்சியில் உட்கார்ந்து கொள்ள பாஜக நரி தந்திரத்திற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகி உள்ளதால் அவருக்கு சாபவிமோசனமே கிடையாது. கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான் அனைத்து தொண்டர்களுக்கும் அறிமுகமானவர் செங்கோட்டையன் தான்.

 

கட்சி உடைத்துவிடுமோ என்று செங்கோட்டையன் கவலைபடுகிறார். சரியோ தவறோ ஒரு திராவிட இயக்கம் உடைக்க பார்கிறாா்கள் உடைய போகிறது உடையாமல் இருக்க முடியாமல் பயிற்சியில் இறங்கி உள்ளார்கள் அவர்களில் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் என நாஞ்சில் சம்பத் கூறினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை தொடக்கம்!

Jeba Arul Robinson

முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

Janani

இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

Jayapriya