கரூர் மேட்டுத் தெரு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுத் தெரு பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ அபய ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நாள்தோறும் இரவு சுவாமி திருவீதி உலா யானை வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், வெள்ளி கருட வாகனத்திலும், சிம்ம வாகனங்கள் போன்ற பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவில் காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி முத்தங்கி அலங்காரத்தில் ஆலயம் வலம் வந்த பிறகு ஆலயத்தில் அருகே உள்ள தேர்மீது கொலுவிருக்க செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் ஆலயத்திலிருந்து முக்கிய வீதி வழியாக சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
———அனகா காளமேகன்







