கொரோனா நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில், பாஜக யாத்திரை செல்வது என்பது முறையற்றது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கீதா ஜீவன், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளதாகவும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 72% சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து இருந்து ஏழை எளிய மக்கள் நலன் காண வேண்டும் எனவும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்கு சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவும், தமிழ்மொழி வளர்ச்சி அடையவும் தமிழக மக்கள் வளர்ச்சிக்கு அடைய வேண்டும் என்கிற முனைப்போடு பணியாற்றி வருகிறார்
மேலும், கொரோனா 3வது அலை குறித்து உலக பொது சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாஜக யாத்திரை அறிவித்துள்ளது முறையற்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.








