திமுக ஆட்சியில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் ரகுபதி

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு துணை வேந்தர்கள் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்ன சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.   புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட சார்பில் 350 கர்ப்பிணி…

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு துணை வேந்தர்கள் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்ன சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட சார்பில் 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நபர்களை விசாரணை செய்து அதன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் அறிவித்துள்ளார் என சுட்டிக்காட்டினார்.

அதன்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ள நபர்களை துறை ரீதியாக விசாரணை செய்வதற்கு உண்டான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது. அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரணை செய்ய பட உள்ளனர். முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த காலங்களில் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளில் அதிக முறைகேடுகள் நடந்ததாகவும், தான் வந்து அதை சரி செய்ததாகவும் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, சட்டத்துறை அமைச்சராக தான் வந்து பிறகு எந்த துணைவேந்தரையும் தான்
நியமிக்கவில்லை.

கடந்த காலங்களில் என்ன நடைபெற்றது என்பது குறித்து தனக்கு தெரியாது என்றார். தேர்வு குழு மூன்று பேரை துணைவேந்தர்கள் பதவிக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் அறிவிப்பார் என்ற தகவல் மட்டுமே தனக்கு தெரியும் என தெரிவித்தார். கோவை சம்பவத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இதைவிட விரைவாக என்ன செய்ய முடியும் என்றார். வேறு எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் அரசு உடனடி நடவடிக்கையால் தடுத்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.