“தவெக ஆட்சி குறித்து விமர்சித்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை” – நாஞ்சில் சம்பத் விளக்கம்!

முதலமைச்சர் விஜயின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தவெக ஆட்சி குறித்து விமர்சித்ததாக பரவும் தகவலில் உண்மையில்லை என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ” உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் முதலமைச்சர் விஜய்.

இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் முதலமைச்சர் விஜயின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.