மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை – விமர்சித்த திருப்பூர் துரைசாமி

மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை எனவும், என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்றும் அக்கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க…

மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை எனவும், என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்றும் அக்கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு, திருப்பூர் துரைசாமியின் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படும் என்றும், நிராகரிக்கப்படும் எனவும் வைகோ பதிலளித்தார். இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தமது சுயநலத்திற்காக அறிக்கை விடுத்துள்ள திருப்பூர் துரைசாமியை அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

மதிமுகவில் இருந்து தன்னை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி கடிதம் எழுதுவது குறித்த கேள்விக்கு, நியூஸ் 7 தமிழுக்கு, தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த துரைசாமி, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வழியில் அரசியல் பாதையில் பயணிக்கிறேன். மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை. எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும். தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் கட்சியின் உண்மையான உறுப்பினர்களின் ஆதார் எண் வெளியிட முடியுமா ? போலி உறுப்பினர்களைக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவது செல்லாது எனவும் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.