”அமலாக்கத்துறை அடுத்து தனி நபர் உரிமையிலும் தலையிடும் வாய்ப்புண்டு” – நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேச்சு!!!

அமலாக்கத்துறை இனிவரும் காலங்களில் தனிநபர் உரிமையிலும் தலையிடும் வாய்ப்புண்டு என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார்.  அமலாக்கத்துறை அதிக அளவில் கடந்த 2 மாதங்களாக…

அமலாக்கத்துறை இனிவரும் காலங்களில் தனிநபர் உரிமையிலும் தலையிடும் வாய்ப்புண்டு என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார். 

அமலாக்கத்துறை அதிக அளவில் கடந்த 2 மாதங்களாக தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது. புலனாய்வு அமைப்புகளை நாம் இவ்வளவு அரசியல் நோக்கத்துடன் பார்க்க வேண்டுமா? என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜின் கேள்விகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பதில் அளித்துள்ளார்..

அந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்ததாவது:

”இந்தியாவில் மிக அதிகாரம் பொருந்திய ஒரு துறை அமலாக்கத்துறையே. இவர்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் யாரை எப்போது எங்கு வேண்டுமானாலும் கைது செய்யலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் இந்த துறைக்கு செல்லுபடியாகாது. இன்றைய நிலையில், இந்த சட்டத்தை ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராக வேளை செய்யும் கட்சிகளின் முக்கிய நபர்கள் மீது உபயோகப்படுத்தி, அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி, இன்று அரசியல் வாதிகள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இனிவரும் காலங்களில் அமலாக்கத்துறை நிச்சியமாக தனிநபர் உரிமையிலும் தலையிடும் வாய்ப்புண்டு. முந்தைய காலங்களில் பொட்டா சட்டம், தடா சட்டத்தை பயன்படுத்தி அரசியல் வாதிகள் வஞ்சிக்கப்பட்டனர். அதேபோல் பணமோசடி தடுப்புச் சட்டம் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த சட்டத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டும்.” இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.