காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை; காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள, காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய…

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள, காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு போக, தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்கப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விளக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 487 கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.