இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிய உரையில், மழை வெள்ளதால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 6,230 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாகவும், கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
https://twitter.com/news7tamil/status/1478590670285664256
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் எனவும், கொரொனா பேரிடர்காக 541.64 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், கொரொனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
பாதியில் பள்ளியை நிறுத்திய 73 ஆயிரம் மாணவர்கள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எனவும், கர்நாடக மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்துவதாகவும், இலங்கை சிறையில் உள்ள 68 மீனர்வர்களை விடுவிக்க நடவடிக்கை உடனே தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
https://twitter.com/news7tamil/status/1478590452479578115
இலங்கை பிடியில் உள்ள மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க மத்திய அரசுக்கு ஆளுநர் வலியுறுத்துவதாகவும், இருமொழிக்கொள்கையை கடைப்பிடிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரகடத்தில் மருத்துவ பூங்கா அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது எனவும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பள்ளி கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என் ரவி கூறினார்.







