தனிப்படை அமைத்து தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாட்டகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரஉள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு அழைத்து வந்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
https://twitter.com/news7tamil/status/1478645047688003585
அப்போது பேசிய, எடப்பாடி பழனிசாமி விசாரணை என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை அழைத்து செல்கின்றனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது கிடையாது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.








