”திராவிடமாடல் அரசு போல் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு வேறு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

திராவிட மாடல் அரசு போல பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு வேறு இருக்க முடியாது என்று தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரிலான திமுக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது பேசிய அவர்,

”கருப்பு – சிவப்புக் கடல் போன்று லட்சக்கணக்கான பெண்கள் இப்படி ஒரே இடத்தில் கூடுயதாக வரலாறே இருக்காது. உங்களை பார்க்கவே ஒரு powerful-ஆக உள்ளது. இவ்வளவு சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ள செந்தில்பாலாஜிக்கு என பாரட்டுக்கள். தேர்தல் என்று விட்டாலே திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஒரு ஹீரோ. அந்த ஹீரோவை உருவாக்கும் பணியை இப்போது கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தவர் கனிமொழி.

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். தொடக்கத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். இளம்பெண்கள் நிறைய பேர் இங்கு வந்துள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. திராவிட இயக்கமும் நமது தலைவர்களின் செய்த புரட்சிதான் பெண்கள் விடுதலை. பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை. அதனால் பெயர் அளவுக்கு மசோதவை நிறைவேற்றி விட்டு பாராளுமன்றத்தை நடத்தி வருகிறார்கள்.

விடியல் பயணத்தால் பெண்கள் பயணம் செய்வது அதிகரித்திருக்கிறது. கல்விதான் யாராலும் திருட முடியாது சொத்து. பெண்கல்வி தடைபடக்கூடாது எனதற்காகவே புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. திராவிட மாடல் அரசு போல பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு வேறு இருக்க முடியாது என்று நான் நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். தங்கை கனிமொழிக்கு மட்டும் நான் அண்ணன் இல்லை; இங்கே வந்திருக்கும் கொள்கைச் சொந்தங்களான உங்கள் எல்லாருக்கும் நான் அண்ணன்தான்” என்று கூறினார். இறுதியாக அவர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி பேச்சை முடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.