அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 163 கல்லூரிகளில் 25% அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு 1,31,173 மாணவர்கள் சேர்த்துள்ளோம். இன்னும் 20,000 இடங்கள் காலியாக உள்ளது. மாணவர் சேர்க்கை தேதியை 18ம் தேதி வரை நீடித்து இருக்கிறோம். கணிதம் போன்ற பாடங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது குறித்து முதலமைச்சரின் ஆலோசனையின் படி பாடத்திட்டம் மாற்றம் குறித்தும் பேசி இருக்கிறோம்.
நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு பயிற்சியையும் கொடுக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்லூரிகளுக்கு ஒரே ஆண்டில் 4,000 துணை பேராசிரியர் நியமிக்க ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. அது தவிர இப்போது பணியாற்றும் தற்காலிக ஆசிரியர் தவிர 1,895 பேரை புதிதாக நியமிக்க ஆணையும் வெளியிடப்பட உள்ளது. 8 பிரிவுகளில் காலியிடம் உள்ளது. விண்ணப்பங்கள் பெற்று குழு அமைத்து தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
வரும் 23ம் தேதி தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்கள் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற குறை இருக்க கூடாது என்று முதலமைச்சர் தலைமையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியதால் வருகை பதிவு 50% இருக்க வேண்டும் என்பதால் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.