தேனியில் இருந்து இன்னும் 2-3 ஆண்டுகளில் தேசிய அளவில் கிரிகெட்டில்
விளையாடும் வீரர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரரும், டி-20 கிரிக்கெட் போட்டியில்
சிறப்பாக விளையாடி பலரின் பாராட்டை பெற்ற வருண் சக்கரவர்த்தி தேனி
மாவட்டம் தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மைதானத்தில் உள்ள சேட்டிலைட் சென்டர் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அங்கு பயிற்சி பெறும் இளம் வீரர்களுடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டு பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் வருண் சக்கரவர்த்தி பேசியதாவது:
கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் கிரிக்கெட் மைதானத்தில் செலவிட வேண்டும். அவ்வாறு செலவிட்டால் தான் கிரிக்கெட் பற்றிய பல நூனுக்கங்கள் தெரியவரும். மேலும் வீரர்கள் காயங்கள் இன்றி கிரிக்கெட் விளையாட தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் காயங்கள் இன்றி விளையாடுவது மிகவும் முக்கியம். இன்னும்
2-3 ஆண்டுகளில் தேனியில் இருந்து தேசிய அளவில் கிரிகெட் விளையாடும் வீரர்
உருவாக வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.