சென்னை சூளைமேட்டில் பட்டம் பிடிக்கச் சென்று மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் கண் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு அருகேயுள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவன் பிரசன்னா, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பட்டம் நூல் அறுந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து அறுந்து விழுந்த பட்டத்தை எடுப்பதற்காக மாணவன் ஒரு மாடியிலிருந்து, மற்றொரு மாடிக்கு ஏறிக் குதித்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளான். மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : AI தொழில்நுட்பம் மூலம் துறவிகளாக மாறிய ஹாலிவுட் நடிகைகள்!!
மகன் இறந்த சோகத்திலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பிரசன்னாவின் பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து, சிறுவனின் கண் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை தானமாக வழங்கியுள்ளனர். மகன் உயிரோடு இல்லை என்றாலும், அவனது கண்ணும், நுரையீரலும் உயிர்ப்புடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.







