#TheGoat | விநாயக் மகாதேவனும் காந்தியும் – வெங்கட் பிரபு கூறுவது என்ன?

அஜித் மற்றும் விஜய் என இரண்டு ஸ்டார்களை வைத்து படம் இயக்கிய வெங்கட் பிரபு இருவருக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து தெரிவித்துள்ளார். ‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல்…

அஜித் மற்றும் விஜய் என இரண்டு ஸ்டார்களை வைத்து படம் இயக்கிய வெங்கட் பிரபு இருவருக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து தெரிவித்துள்ளார்.

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியான முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன.

படத்தில் அஜித்தின் கேமியோ அல்லது வசனங்கள் என்று ஏதாவது ஒன்று இடம்பெறும் என தெரிகிறது. படம் ஓடும் 3 மணி நேரம் ரசிகர்கள் போனை தொட மாட்டார்கள் எனவும், அந்த அளவு திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதேபோல், கோட் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் அதிறும் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல், பிரேம்ஜி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கோட் படம் தொடங்கி 60 நொடியிலிருந்து அவ்வப்போது சர்ப்ரைஸ் வந்து கொண்டே இருக்கும். மேலும் படத்தில் விஜயின் கார் எண் ‘CM 2026’ எனவும் கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க, அர்ச்சனா கல்பாத்தி, நாங்கள் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பைக் குறைக்க வேண்டும் என்றே படத்தை பற்றி பெரிதாக பேசவில்லை எனவும், கோட் படத்தின் பட்ஜெட் விஜய் சம்பளத்தைச் சேர்த்து ரூ.400 கோடி வரை செலவானதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த விஜய் வெங்கட் பிரபுவிடம் தான் அவசரப்பட்டு சினிமாவில் ரிடையர்மெண்ட் அறிவித்துவிட்டேன் இல்லை என்றால் உன்னுடன் இன்னொரு படம் பண்ணியிருக்கலாம் என்று சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். படத்தைப் பார்த்த விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவை அப்படியே கட்டிப்பிடித்திருக்கிறார். இதே போல் தான் மங்காத்தா படம் பார்த்த அஜித்தும் அவரை கட்டிபிடித்தார். இந்த இருவரும் கட்டிபிடித்து தன்னை பாராட்டிய தருணத்தைக் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். 

“அஜித் சாரால் தன்னுடைய எமோஷனை கட்டுப்படுத்த முடியாது. அவர் சந்தோஷமாகிவிட்டார் என்றால் அது அவரது முகத்தில் தெரியும். ஆனால் விஜய் சார் அப்படி இல்லை. அவர் தன் எமோஷனை வெளிக்காட்டாமல் அதை கட்டுப்படுத்தக் கூடியவர். எல்லா விஷயங்களுக்கும் நிதானமாக ரொம்ப மெச்சூராக நடந்துகொள்வார்.

ஆனால் அஜித் சாருக்கும் தன்னுடைய எமோஷனை மறைக்கத் தெரியாது. அவர் சந்தோஷமாகி விட்டால் ரெண்டு மூனு கேட்டவார்த்தைகளை சொல்லிக்கூட என்னை கட்டிப்பிடித்துக் கொள்வார். ஆனால் விஜய் சார் அமைதியாக வந்து கட்டிப்பிடித்தபோதே அவர் என்ன நினைக்கிறார் அவருடைய அன்பு எனக்கு தெரிந்துகொள்ள முடியும். அவர் அதை செய்வதே ரொம்ப பெரிய விஷயம். இந்த இரண்டு தருணங்களுமே என் வாழ்க்கையில் மிக நெருக்கமான தருணங்கள்தான். ‘ என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.