ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை; திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

வேலூர் அருகே ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக, நியமிக்கப்பட்ட 8 தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியிலுள்ள ஜோஸ்-ஆலுக்காஸ் நகைக்கடையின்…

வேலூர் அருகே ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக, நியமிக்கப்பட்ட 8 தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியிலுள்ள ஜோஸ்-ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரைத் துளையிட்ட மர்ம நபர்கள் 15 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கடையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில், சிங்க முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் கடையினுள் புகுந்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் மீது, FOAM SPRAY செய்த காட்சி இடம்பெற்று இருந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல காவல் துறை துணைத்தலைவர் சந்தோஷ்குமார், கொள்ளை சம்பவம் தொடர்பாக, 4 டி.எஸ்.பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்கும் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.