நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதன் முடிவில் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். லேசான அறிகுறிகள் இருப்பதால், அவர் விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும், இன்னும் முழுமையாக கொரோனா வைரசின் பரவல் குறையவில்லை என்பதனை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதேசமயம் ஒமிக்ரான் தொற்று தற்போது தமிழகத்தில் பரவி வருவதால் போதிய பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என அரசு சார்பில் தொடர்ந்து அறிவுருத்தப்படுள்ளது.








