சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அதிகரித்த தங்கத்தில் விலை பிறகு குறைந்தது. கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்ட நிலையில், இன்றும் விலைச் சரிவு நீடிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்று ஒரே நாளில், சென்னையில் கிராம் ஒன்றுக்கு 16 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 434 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதன் விலை நேற்று 4,450 ரூபாயாக இருந்தது. அதேபோல, 35,600 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 128 ரூபாய் குறைந்து 35,472 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படு கிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, மும்பையில் ரூ.4,612 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,405 ஆகவும், ஐதராபாத்தில் ரூ.4,405 ஆகவும், கேரளாவில் ரூ.4,415 ஆகவும், டெல்லியில் ரூ.4,625 ஆகவும் உள்ளது.
இதுபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 68 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.69.30 ஆக இருந்தது. இன்று ரூ.68.30 ஆகக் குறைந்துள்ளது.