ஓமலூர் அருகே 5 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து திருடிய குற்றவாளியை ஐந்து மாதங்களுக்கு பிறகு ஓமலூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம்
அடுத்தடுத்து ஐந்து மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை
திருடி சென்றனர். இது குறித்து கடை உரிமையாளர்கள் ஓமலூர் காவல் நிலையத்தில்
புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஓமலூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு
பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்கள் 3 பேர் அடுத்தடுத்து உள்ள 5 மளிகை கடைகளின் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சம்பவம் நடைபெற்று ஐந்து மாதங்களுக்கு பிறகு தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த மாஸ்கோ சர்வோன் 20 என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரனையில் மாஸ்கோ சர்வோன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து குற்றவாளி மாஸ்கோ சர்வோனை திருட்டு வழக்கில் கைது செய்து
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள
மாஸ்கோ சர்வோன் மீது தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி காவல் நிலையத்தில்
ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ம. ஶ்ரீ மரகதம்







