சென்னை, காசிமேட்டில் ‘செங்கை விசைப்படகு மீனவர்கள் சங்கம்’,
எங்களுக்கு தான் சொந்தம் என்று இருதரப்பு மீனவர்களிடையே
வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் ‘செங்கை விசைப்படகு மீனவர்கள்
சங்கம் ’செயல்பட்டு வருகிறது.இதில் முன்பு ஒன்றாக இருந்த மீனவர்கள் தற்போது
இரண்டு பிரிவினராக மாறிவிட்டனர். இந்நிலையில், இரண்டு தரப்பினரும் மாறி
மாறி கட்டிடமும் சங்கமும் எங்களுக்கு தான் சொந்தம் என்கின்ற அடிப்படையில்,
காவல் நிலையத்திலும் மீன்பிடி துறைமுக அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.
இதனால், இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு
வருகிறார். இந்நிலையில், இன்று மற்றொரு தரப்பினர் சங்கத்தின் உள்ளே அவர்களை
அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை
எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் உதவி ஆணையர்
மற்றும் ராயபுரம் உதவியாளர் ஆகியோர் வந்தனர்.
மேலும், அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் சுமுக பேச்சு
வார்த்தையில் உடன்படாததால் சங்கத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இரண்டு
தரப்பினரிடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை
போலீசார் அப்புறப்படுத்தினர். இரு தரப்பினரையும் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு
அழைத்து முடிவு செய்த பின்னர், சங்க கட்டிடம் ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார்
தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கு. பாலமுருகன்







