தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக இயக்குனரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏலே திரைப்படத் தயாரிப்பாளர் கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தை வெளியிட முயல்வதாகவும், ஆனால் திரையரங்குகளோ 30 நாட்கள் வரை OTT ல் வெளியிடமாட்டேன் என கடிதம் கொடுத்தால் மட்டுமே படங்களை வெளியிடுவோம் எனக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்பதை உணர வேண்டும் எனவும், ஏலே திரைப்படம் யார் தடுத்தாலும் மக்களை சென்றடையும் என்றும் கூறியுள்ளார். திரையரங்குகள் தங்களின் எதேச்சதிகாரத்தை முற்றிலும் தவிர்த்தால்தான் கலைத்துறை மீளும் எனவும் இயக்குனர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.