முக்கியச் செய்திகள்

கலை இழந்த காதலர் தின கொண்டாட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்!

காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிபடுத்த ரோஜா மலரையே மக்கள் பயன்படுத்துகின்றனர். காதலர் தினத்தின் ஒரு முக்கிய பங்காக விளங்கும் ரோஜா மலர் அன்பின் சின்னம் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாஜ்மஹால், நொப்ளஸ், பிங்க் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை அனைத்தும் புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தை ஒட்டி மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக காதலர் தினத்தையொட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரோஜாக்களுக்கு குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley karthi

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமை சிகிச்சை!

Halley karthi

’இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள்’: முதல்வர் ஸ்டாலின்

Halley karthi

Leave a Reply