முக்கியச் செய்திகள் உலகம்

கையில் குழந்தை; காலால் விமான கேபினின் கதவை மூடிய பெண்

பெண் ஒருவர், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு காலால் விமானத்தின் மேல் அடுக்கில் உள்ள சிறிய அறையின் கதவை மூடும் காணொளி தற்போது பரவலாக பகிரப்படுகிறது.

பயணங்கள் எப்போதும், இனிமையானதாக அமைந்துவிடுவது இல்லை, அது பல காரணங்களால் மாறுபடுகிறது. குறிப்பாக பயணத்தின்போது நாம் கொண்டு செல்லும், பொருட்கள் / உடமைகள் அதனை தீர்மானிக்கவும் செய்கிறது. அதனால், சிறந்த பயணத்தை அனுபவிக்க குறைந்தபட்ச சுமை அல்லது பொருட்களை எடுத்துச் செல்வதே அதற்கு தீர்வு என பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று, ஃபிகென் என்ற ட்விட்டர் பயனர், “மிகவும் அருமையாக உள்ளது” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், விமானத்தில் உள்ள மேல்நிலை கேபினை பெண் தனது காலால் மூடும் காட்சி பதிவுசெய்யப்படுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, அந்த பெண் விமானத்தில் இருந்து இறங்க தயாராகி வருவதையும், கையில் குழந்தை இருப்பதயும் பார்க்க முடிகிறது. ஒரு கையில் குழந்தையை பிடித்துள்ள அவர், மற்றொரு கையில் விமானத்தின் மேல் அடுக்கில் உள்ள அவரது உடமையைகளை தூக்குகிறார்.

அண்மைச் செய்தி: ‘Whatsapp-ல் பணம் அனுப்புபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த செய்தி!’

மற்றவர்கள் உதவ நினைப்பதற்குள் தனது உடலை ஜிம்னாஸ்ட் போல வலது காலைத் தூக்கி மேல் உள்ள கேபினின் கதவை அவர் காலால் மூடுகிறார். மற்றவர் உதவியை எதிர்பார்க்காத அந்த பெண்ணின், இந்த சிறிய ஸ்டண்ட் சமூக ஊடகங்களில் தற்போது மிகவும் பரவலாக பகிரப்படுகிறது. சுமார் 2.1 லட்சம் பார்வைகள் மற்றும் 6,861 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல பயணிகள் விமானத்தில் பயணிக்கும்போது தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு, அதன் கதவுகளை மூடாமல் அப்படியே விட்டி செல்லும் சூழ்நிலையில், இந்த பெண் பொறுப்புடன் அந்த கதவுகளை மூடிவிட்டு செல்வது பாரட்டத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

’சினிமா துறையை சிலர் வேண்டுமென்றே கொல்கிறார்கள்…’ மோகன்லால் வேதனை

Ezhilarasan

மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்

Ezhilarasan

ரசாயன மூலம் பழுக்க வைக்கப்பட்ட 15 டன் பழங்கள் பறிமுதல்

Halley Karthik