தாய் மற்றும் தம்பியை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 20 வயதான இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்த பத்மா (45). இவருக்கு நித்தேஷ் (20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், பத்மாவின் மூத்த மகன் நித்தேஷ் தனது தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் அவர்கள் இருவரின் சடலத்தையும் கோனி பையில் கட்டி வைத்து விட்டு, உறவினர்களுக்கு போன் மூலம் மெசேஜ் செய்து தகவல் அனுப்பினார். அவர் உறவினர்களுக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் தாய், தம்பியை கொலை செய்ததாகவும், தன்னை தேட வேண்டாம் தானும் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற நித்தேஷ் (20) என்பவரை தேடி வருகின்றனர்.
கல்லூரி படிப்பில் 14 அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை கொலை நித்தேஷ் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடேயே, திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த நிதிஷை காவல் துறையினர் கைது செய்தனர்.







