மகளிர் இடஒதுக்கீட்டை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு வலியுறுத்தினார்.  மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கனிமொழி சோமு…

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி சோமு வலியுறுத்தினார். 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கனிமொழி சோமு பேசியதாவது:

முதலாவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்றும், இன்றும், என்றும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்துள்ளார்.

பழங்காலத்திலிருந்தே, தமிழ்நாடு ஒரு புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எங்களிடம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது இருந்தது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ஒரு ‘உரிமைக்கான விஷயம். 1921ஆம் ஆண்டு முதன்முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை நீதிக்கட்சி வழங்கியது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

திமுக ஆதரவால் தான் 1996 ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது, அதை யாராலும் மறக்க முடியாது. 2010 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக இடம் பெற்றிருந்த போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய அரசு 9.5 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு அதே மசோதாவை தாக்கல் செய்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என கூறுவார்கள். அதுதான் தற்போதைய பெண்களின் நிலை.

எனவே இந்த மகளிர் இடஒதுக்கீட்டை மக்களவை தேர்தலுக்கு முன் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவேளை இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது எந்த தேதியில் அமல்படுத்தப்படும் என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்க வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது.

இவ்வாறு திமுக எம்பி கனிமொழி சோமு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.