முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

Sex toy-யை Order செய்ததால் பெண்ணுக்கு வந்த சிக்கல் – வில்லங்க வழக்கை வென்று காட்டிய வழக்கறிஞர்

சமீபத்தில் பெண் ஒருவர் Online-ல் Sex toy Order செய்து… அந்த பொருள் விமானத்தில் வந்த போது கஸ்டம்ஸில் சிக்கி கொண்டதோடு, Order செய்த பெண்ணுக்கு எதிராக “against public morality” அடிப்படையிலான நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை பல வழக்கறிஞர்கள் கையில் எடுக்க தயங்கிய நிலையில், ஒரு பெண் வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கி சிக்கலை தீர்த்து வைத்த சம்பவம் தற்போது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

கல்வி, வாக்களிப்பு போன்ற உரிமைகளை படிப்படியாக போராடி வென்ற பெண்ணினம், ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் வேலை செய்ய வேண்டும் என்ற முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளது. இருப்பினும் Sex-ஐ பொறுத்தவரை இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட, பெண்கள் தங்கள் துணை, உடலை தொட அனுமதிக்கும் விஷயத்திலும், யாரை ? எதை ? எப்போது ? தங்களுடைய தேவைக்கு பயன்படுத்த வேண்டும் போன்ற விஷயங்களிலும் ஆண்களை ஒப்பிடும் போது பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பெண் Online-ல் Sex toy Order செய்து… அந்த பொருள் வெளிநாட்டிலிருந்து
விமானத்தில் வந்த போது கஸ்டம்ஸில் சிக்கி கொண்டதோடு, Order செய்த பெண்ணுக்கு எதிராக “against public morality” அடிப்படையிலான நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு பெண் என்பதனால் இத்தகைய நோட்டீஸ் அனுப்பப்பட்டதா, அல்லது இதுதான் கஸ்டம்ஸின் வழிமுறையா என்பது தெரியாமல் அந்த பெண் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருந்த போதும், இதுபோன்ற வழக்குகளை கையில் எடுத்தால் நம்மை இந்த சமூகம் என்ன நினைக்குமோ என எண்ணி பல வழக்கறிஞர்கள் பின்வாங்கியுள்ளனர். இருப்பினும் திலகவதி திலோ என்கிற பெண் வழக்கறிஞர் இந்த வழக்கை துணிச்சலோடு கையில் எடுத்து Sexual Privacy -க்கும்,  Public Morality -க்கும், Customs -க்கும் என்ன சம்மந்தம் என்ற அடிப்படையில் வழக்கை அணுகி, அந்த பெண்ணுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

குறிப்பாக Customs Act, 1982-ல் Public Morality-ல் Sex toys குறித்து எந்த தகவலும் இல்லை எனவும், சில உதாரண வழக்குகளை முன் மாதிரியாக குறிப்பிட்டும் அவர் வாதிட்டுள்ளார். இதனால் Sex toy Obscene இல்லை எனவும், அது Right To Sexual privacy என்றும் கூறி பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வர, அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து ஆனதோடு, அவர் Order செய்திருந்த பொருளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டதாம்.

தற்போது இந்த வழக்கு குறித்தும், அந்த பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கிய வழக்கறிஞர் திலகவதி திலோவின் துணிச்சலான செயல் குறித்தும் சமூகவலை தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பி.எம்.கிசான் திட்டத்தின் 11-வது தவணை விடுவிப்பு

G SaravanaKumar

டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!

Vandhana

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

EZHILARASAN D