நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது..!

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று தொடங்கியது.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரானது இரு அவைகளிலும் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டமானது வருகிற 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

மத்திய அரசானது  இக்கூட்டத் தொடரில் அணுசக்தி மசோதா 2025,  காப்பீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட 13  மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. மறுபுறம் 12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், டெல்லி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முயலும்  என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலையில் வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொடரானது பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.