திமுக ஐடி விங் செயல்பாடு: சாட்டை சுழற்றப்படும் என திமுக எம்பிக்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா

திமுக ஐடி விங் செயல்பாடு குறித்து கேள்வி கேட்ட தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு சாட்டை சுழற்றப்படும் என திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உறுதியளித்துள்ளார். திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ, எம்.பிக்களும் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்குகளை…

திமுக ஐடி விங் செயல்பாடு குறித்து கேள்வி கேட்ட தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு சாட்டை சுழற்றப்படும் என திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா உறுதியளித்துள்ளார்.

திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ, எம்.பிக்களும் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்குகளை வைத்துள்ளளனர். அவர்கள் தாங்கள் செல்லும் விழாக்கள், நிகழ்ச்சிகள் பற்றிய பதிவுகளை பதிவிடுகிறார்கள். ஆனால், ஐ.டி விங் முன்னெடுக்கும் பிரச்சாரங்களை பகிர்ந்து அதை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பதில்லை என்கிற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வாங்குவதில் அரசுக்கு இழப்பு என்றார் அண்ணாமலை; அவர் கொண்டு வந்த ஆதாரங்களில் ‘ஒன்றுமில்லை’ என்பதை சம்பந்தப்பட்ட துறையினரே விளக்கி, அவர் காட்டிய ஆதாரங்கள், அத்தனையையும் நொறுக்கித் தள்ளினர்!” என DMK IT WING ட்விட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒரு பதிவு பதிவிடப்பட்டு இருந்தது.

அண்மைச் செய்தி: ‘B.E., B.Tech., B.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிப்பு’

இந்த பதிவை ரீ ட்விட் செய்த தர்மபுரி எம்பி செந்தில்குமார், திமுகவின் உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒரு ட்வீட் செய்த 6 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் லைக்குகளை எட்ட வேண்டும். ஆனால், எதிர்பாராதவிதமாக 240 லைக்குகளை மட்டும் பெற்றுள்ளது.  இது சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் என திமுக எம்பியும் ஐடி விங் பொறுப்பாளருமான டிஆர்பி ராஜாவை ட்விட்டரில் டேக்  செய்து  குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தங்களின் நேரம் பாராத கடின உழைப்பையும் தாங்கள் செலவிடும், ஐடி விங்குக்காக தாங்கள் செலவிடும் பணத்தையும் நன்கு அறிவேன் என்றும் ஆனால் முதலமைச்சரின் செய்திகளை கூட திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள்  ரீட்வீட் செய்யாமல் இருப்பது ஏன் என்றும் செந்தில்குமார் எம்பி கேள்வி எழுப்பியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எம்பி செந்தில்குமார், ட்விட்டரில் எப்போதும் கொஞ்சம் கார சாரமாக எதிர் கருத்துகளை வைத்து விவாதித்து வருவார். அதேசமயம் ட்விட்டரில் உதவி கோரும் பலருக்கும் மாநிலம் கடந்தும் உதவி செய்துவருகிறார். இந்நிலையில், தான் சார்ந்த கட்சியின் அதிகார பூர்வ கருத்துக்கு கேள்வி எழுப்பி இருப்பது ட்விட்டரில் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக,  திமுக ஐ.டி விங் மாநில செயலாளரும் திமுக எம்எல்ஏவுமான  டி.ஆர்.பி.ராஜா, கடந்த சில மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பி.டி.ஆர் அமைத்துத் தந்த அடித்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவற்றில் பலவற்றைப் பற்றி இங்கு விவாதிக்க முடியாது என தெரிவித்துள்ள டிஆர்பி ராஜா,  சாட்டை சுழற்றப்படும் என்றும் திமுக ஐடி விங்கில் செயல்படாதவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.