பாகிஸ்தானில் மின்தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் ஏற்கனவே, சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் திருமண கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் திருமண விருந்தில் ஒரே ஒரு உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாலும், அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் வாகன ஓட்டிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எரிபொருட்களை இறக்குமதி செய்ய போதுமான அளவு பணம் இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு வாரம் முன்பு 10.30 பில்லியன் டாலராக இருந்த பாகிஸ்தானின் அந்நிய செலாவனி கையிருப்பு, கடந்த 6ம் தேதி நிலவரப்படி 190 மில்லியன் டாலராக சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








