“ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொ டர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது. அவர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன்”. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.