கம்பேக் கொடுத்தாரா லிங்குசாமி, தி வாரியர் திரைப்படத்தின் விமர்சனம்.

தி வாரியர் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.  லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி…

தி வாரியர் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான குரு என்கிற வில்லனாக ஆதி நடித்துள்ளார்.

மதுரையில் மக்களை பயமுறுத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு தாதா கும்பலை மருத்துவரான ராம் பொத்தினேனி எதிர்க்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் ராம் பொத்தினேனியை தாதாவான ஆதி கடுமையாக தாக்கி அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுவார். பின்னர் ஊரை விட்டு தப்பி செல்லும் மருத்துவர் ராம் பொத்தினேனி 2 ஆண்டுகள் கழித்து காவல்துறை அதிகாரியாக அதே ஊருக்கு வருவார். தாதா ஆதியை காவல்துறை அதிகாரி ராம் பொத்தினேனி என்ன செய்தார் என்பது தான் தி வாரியர் திரைப்படத்தின் கதை.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது அஞ்சான் ( 2014 ) திரைப்படத்திற்கு பிறகு லிங்குசாமி இந்த படத்தை இயக்கியுள்ளதால் தி வாரியர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. லிங்குசாமி மீண்டும் கம்பேக் கொடுத்துவிட்டார் என தி வாரியர் திரைப்படத்தின் புரொமோஷன் விழாவில் கலந்து கொண்ட பல நடிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வழக்கமான ரவுடி, போலீஸ் கதையை சற்று மாற்றியமைத்து எடுத்துள்ளார் லிங்குசாமி. ரவுடி, தாதா, வில்லன் என்று சொன்னதும் மதுரையில் மட்டும் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்கிற தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றாமல் அப்படியே லிங்குசாமியும் இந்த படத்தில் கடைபிடித்துள்ளார். நானும் மதுர காரன் தான் என்கிற வசனம் மட்டும் இந்த படத்தில் மிஸ்ஸிங்.

மதுரையின் அடையாளம் என ஹைதராபாத் பின்னணியை காட்டியிருப்பது எல்லாம் மதுரைகாரர்கள் பார்த்தால் என்ன ஆவது என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளதால் பெரும்பாலும் தெலுங்கு நடிகர்கள் தான் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் மட்டுமல்ல படமே தெலுங்கு படம் போன்ற உணர்வே கொடுக்கிறது. காட்சிகள், வண்ண வண்ண நிற உடைகள் என தெலுங்கு சினிமாவை பிரதிபலிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு சற்று பலம். குறிப்பாக புல்லட் பாடல் ஏற்கனவே பெரிய வெற்றியை பெற்றுவிட்டது இந்த படத்திற்கு பாசிடிவ் தான்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தி வாரியர் எந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தாலும் ஒரு பக்கா கமர்சியல் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. புல்லட் பாடலை தவிர்த்து இன்னும் 4 பாடல்கள் சலிப்பையே ஏற்படுத்துவதாக உள்ளது. தாதா குருவாக நடித்துள்ள ஆதி, தாதாக்களுக்கே உரித்தான கருப்பு நிற சட்டையும் கருப்பு நிற வேட்டியிலும் ரசிகர்களை கவர முயற்சி செய்துள்ளார்.

சில இடங்களில் ஆதியின் நடிப்பு ரசிக்க வைத்தாலும் பெரும்பாலும் அந்த கதாப்பத்திரத்திற்கான கெத்து குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது. பஞ்ச் வசனங்கள் போதும் போதும் என்று தொன்றுகிற அளவுக்கே உள்ளது. ஒரு படத்தை முழுசா பார்க்கனும் என்றால் லாஜிக் பார்க்க கூடாது. லாஜிக் பார்த்தால் படமே பார்க்க கூடாது. அப்படி லாஜிக் இல்லாத பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது. அது போலவே தி வாரியர் திரைப்படமும் தெலுங்கு ரசிகர்களை அதிகம் ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தமிழ் ரசிகர்களின் மனநிலையை பொறுத்தே லிங்குசாமி கம்பேக் கொடுத்தாரா இல்லையே என்பதை தெரிவிக்க இயலும்…

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.