இலங்கையில் போராட்டக்காரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் பொருளாதார பிரச்னை காரணமாக விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு என அன்றாட தேவைகளுக்கே மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
அப்போது, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச மே 9 ம் தேதி பதவி விலகி, பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். மக்கள் போராட்டம் ஓயாத நிலையில் ஜூலை 9 ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் நாட்டைவிட்டு வெளியேறி, தற்போது பதவி விலகினார். அந்நாட்டு அரசமைப்பு சட்டத்தின் படி பிரதமரே அதிபர் பொறுப்பை வகிப்பார்.
மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது. பிரதமர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதிபர் மாளிகையையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். அதிபர் மாளிகை இப்போது சுற்றுலாத் தலம் போல் மாறியிருக்கிறது.
தற்போது, இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் டுவிட்டரில் கூறியாதவது:
நான் இலங்கையில் நிகழும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்,
போரட்டத்தின் காரணம் குறித்தும் போராட்டக்காரகளின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்து அதனை சரி செய்ய முயல வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் சமரசத்துடன் செயல்பட்டு இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








