முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காத சூழலில், பொதுமக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்ததாக தெரிவித்தார். மேலும், அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறே சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 83% மக்களை வரிவிதிப்பு பாதிக்காது என்பதே உண்மை என குறிப்பிட்ட முதலமைச்சர், தற்போதுள்ள நிதி ஆதாரத்தைக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால், வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என கூறினார்.

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு அரசு சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை’

மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், மாநில அரசியலில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சிகளின் மத்தியில் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!

இருசக்கர வாகன விபத்து, கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

Saravana Kumar

தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

Gayathri Venkatesan