35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய ’பேட்ட’ படத்தின் வில்லன்

நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி உருவாகவுள்ள ‘ஹத்தி’ (Haddi) படத்தின் முதல் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். ஆனந்திதா ஸ்டுடியோஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘ஹத்தி’ எனும் படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளார். இப்படம் அக்ஷத் அஜய் ஷர்மா இயக்கத்தில், இதுவரை பார்த்திராத தோற்றதில் நவாசுதீனின் நடித்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் நவாசுதீனின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளியாகி உள்ள மோஷன் போஸ்டர் ஒன்று ரசிகர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. ‘நவாசுதீன் சித்திக்’ முற்றிலும் அடையாளமே தெரியாத அளவிற்கு வேடமிட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். நவாசுதீனின் முதன் முறையாகப் பெண் வேடமிட்ட ஃபர்ஸ்ட் லுக் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. பழிவாங்கும் கதையை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் 2023ஆம் ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.இந்த மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நவாசுதீன், ”குற்றம் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு தனித்துவமான சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கப்போகிறது. நான் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நடிக்க இருப்பதால் ஒரு நடிகனாக இந்த கதாபாத்திரம் என்னை உந்தி தள்ளும்” என்றார்.  இதனால் இந்தப் புதிய தோற்றம் திரை ரசிகர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது. பலரும் இந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading