நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலாபால் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். சிந்துசமவெளி படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், மைனா படத்திலிருந்து பலரால் அறியப்பட்டவர். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானார்.
தெய்வத்திருமகள் படத்தில் இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் ஏற்பட்ட காதல், தலைவா படத்திற்கு பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. எனினும் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விலகினர். விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் அமலா பால் கவனம் செலுத்த தொடங்கினார். அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளிவந்த ‘போலா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.
இதனிடையே அவ்வபோது பயணங்கள் மேற்கொள்ளும் அமலா பால், கடந்த மாதம் (அக்.26) தனது பிறந்தநாளில் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த நவம்பர் மாதம் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில வாரங்களிலேயே தனது கர்ப்ப செய்தியையும் அறிவித்தார். தன்னுடைய ஏழாவது மாதம் தொடங்கியபோது, கிளப்பில் நடனம் ஆடி அதை கொண்டாடினார், போன மாதம் வளைகாப்பும் நடத்தினார்.
இந்நிலையில் தனது ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ளார் நடிகை அமலாபால். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘ஒன்பதாவது மாதத்தை வரவேற்கிறேன். உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி’ என பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி இப்படியா ஆட்டம் போடுவது? கவனமாக இருங்கள்” எனவும் கூறி வருகின்றனர்.







