சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு. கடந்த…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு. கடந்த 2003 ஆம் ஆண்டின் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இவர் அறிமுகம் ஆனார். இங்கிலாந்து அணிக்காக 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இவர் உள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

“இந்த கோடையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிதான் என்னுடைய கடைசி டெஸ்ட். சிறுவயதிலிருந்தே எனக்கு பிடித்த விளையாட்டை எனது நாட்டுக்காக 20 வருடங்கள் விளையாடினேன் என்பதை நம்பமுடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுவதற்கு இதுதான் சரியான தருணம். டேனியலா, லோலா, ரூபி, எனது பெற்றோரின் அன்பும், ஆதரவும் இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியாது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இனி உள்ள எனது நாட்களை கால்ஃப் மூலம் நிரப்ப உள்ளேன். இத்தனை வருடங்களாக என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.