தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று (மே. 11) காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @Chief_Secy_TN pic.twitter.com/p1cmvtY3Hn
— TN DIPR (@TNDIPRNEWS) May 11, 2024
இந்த கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல வகை போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







