சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (அக். 24) காலை 5.30 மணி நிலவரப்படி கிழக்கு மத்திய வங்கக் கடலில் நன்கு வரையறுக்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று, அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26-ஆம் தேதி காலைக்குள் புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணி வரை மழைக்கு வாய்ப்பு?
இதன் காரணாமாக, தமிழகத்தில் இன்று மாலை 5 மணி வரை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவள்ளூர், சென்னை, திருவாரூர், விழுப்புரம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடி, மின்னலுக்கும் வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




