கஜோல், தமன்னா நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ சீரிஸின் ட்ரெய்லர் வெளியானது

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி சீரிஸ் இந்த மாத இறுதியில் வருகிற 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இந்த சீரிஸின் ட்ரைலர்…

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி சீரிஸ் இந்த மாத இறுதியில் வருகிற 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இந்த சீரிஸின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல விமர்சனங்களை கடந்தும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றிருந்தது. ராதிகா ஆப்தே. க்யாரா அத்வானி, புமி பட்னேகர், மணிஷா
கொய்ராலா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நடித்திருந்த அந்த சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கி இருந்தனர். இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாம் பாகமானது வருகிற ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ஆந்தாலஜி சீரிஸின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இதில் கஜோல், தமன்னா, விஜய் வர்மா, திலோதமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா, மிருணாள் தாக்கூர், நீனா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதோடு, இந்த சீரிஸை இயக்குநர்கள் அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகிய புதிய இயக்குனர்கள் குழு இயக்கி உள்ளனர். முந்தைய பாகத்தை போலவே உருவாகி இருக்கும் இந்த சீரிஸின் டீசர் வெளியான போதே அதில் இடம் பெற்றிருந்த வசனங்கள் முகம் சுளிக்கும் படியாக இருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள ட்ரைலரிலும் பல எல்லை மீறிய வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் முந்தைய லஸ்ட் ஸ்டோரீஸ் பெற்ற வெற்றியை விட பல மடங்கு வரவேற்பை இந்த 2ஆம் பாகமும் பெற்று தரும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. தற்போது இந்த ட்ரைலர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.