மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் பட டிரெய்லர் வெளியானது…….!

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ”மைக்கேலின்” டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘மைக்கேல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார்.

மேலும் ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ’மைக்கேல்’ படம் ஏப்ரல் 24-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்க அமெரிக்க பூர்வீகத்தை கொண்டவரான மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி பிறந்தார். நடனம் மட்டுமின்றி இசை, பாடல்கள் எழுதுவது என பன்முக திறன்கொண்ட மைக்கேல் ஜாக்சன் தனது பாடல்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள நிறவெறி, காவல்துறை வன்முறை, உள்ளிட்ட பல சமூக விழிப்புணர்வு கருத்துகளை பேசினார். மேலும் இவரின் ‘மூன் வாக்’ என்ற நடன அசைவு உலகப் புகழ் பெற்றது.

குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மைக்கேல் ஜாக்சன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இது தொடர்பான் வழக்குகளில் வாபஸ் பெறப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.