திருவொற்றியூரில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் கடலில் குளிக்கச் சென்ற 4 பேர் மாயமான நிலையில், மேலும் ஒரு பெண் கடலில் குளிக்கச் சென்று உயிரிழப்பு.
சென்னை எண்ணூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிக்கொண்ட இரண்டு சிறுவர்கள் உயிருடன் மீட்பு ஒரு பெண் உயிரிழப்பு. சுப காரியத்துக்கு வந்து நடந்த சோகம்.
கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் உள்ள மங்களம் போட்டையை சேர்ந்த சுமார் 400 பேர் , உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வந்தவர்கள் திருமணம் முடிந்த பிறகு மதியம் சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா கடற்கரையில் சுமார் 50 மேற்பட்ட உறவினர்கள் கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டு இருந்த போது மூன்று சிறுவர்கள் 48 வயதுடைய சகினா பி. என்ற பெண் ராட்சத அலையில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தனர்.
கடற்கரையில் நின்று கொண்டிருந்த உறவினர்கள் அலறல் சத்தம் கேட்டு எண்ணூர் ராமகிருஷ்ணா கடற்கரையிலிருந்து மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள் உயிருடன் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த சகினா பி மற்றும் இரு சிறுவர்கள் பைபர் படகில் மீட்டுக் கொண்டு வரும் போது திடீரென ராட்சத அலை பைபர் படகு கவிழ்ந்து. விழுந்ததும் உடனடியாக இரண்டு சிறுவர்களை மீனவர்கள் கையில் பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சகினா பி. மீட்டு கரைக்குக் கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: