நகை கொள்ளை போனது குறித்து வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம் – வங்கி நிர்வாகம் விளக்கம்

நகை கொள்ளை போனது குறித்து வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும், நகைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.   சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் வங்கியில் நேற்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கத்தி…

நகை கொள்ளை போனது குறித்து வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும், நகைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் வங்கியில் நேற்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கத்தி முனையில் வங்கி ஊழியர்களை கட்டுப் போட்டு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வங்கியில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்தது. மேலும் அந்த வங்கியில் பணிபுரிந்த முருகன் என்பவரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். தடைய அறிவியல் நிபுணர்கள் சோதனைக்காக அழைத்து வரபட்டு விசாரணை நடத்தினர். குற்றவாளிகளில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும், அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், மீதம் இருக்கும் அடையாளம் தெரியாத இருவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ் தெரிவித்தார்.

 

இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து வாடிக்கையளர்கள் பயப்பட வேண்டாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் கொள்ளை போன நகைகள் கிடைக்காத பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு இன்சுரன்ஸ் பணம் கொடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.