முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக-வினர் எல்லை மீறினால் காங்கிரஸ் ஆயுதம் ஏந்தும் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பா.ஜ.க.வினர் எல்லை மீறினால் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் கட்சி ஆயுதம் ஏந்தவும் தயங்காது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் 75 கிலோ மீட்டர் பாதயாத்திரை பேரணியை
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், 75 வது சுதந்திர தின பவள விழாவிற்கு நாம் சொந்தகார்கள் என்றார். இது வரை நாம் தான் மூவர்ண கொடியை ஏந்தி வந்தோம். ஆனால் தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள் இன்று மூவர்ண கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார்கள். நாட்டிற்காக எதுவும்
செய்யாதவர்கள் பதவியை தக்க வைத்து கொள்ள கொடியை எடுத்து உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மூவர்ண கொடிக்கு மரியாதை செய்வதாக சொல்லி கொள்கின்றவர்கள் என சாடினார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் தேசிய கொடியை கட்டி செல்கிறார். அது மீது
பாஜகவினர் செருப்பு வீசுகிறார்கள். தேசிய கொடி மீது மரியாதை இருந்து இருந்தால் செருப்பை வீசி இருப்பீர்களா? வீசிய செருப்புக்கு என்ன மரியாதையோ அது தான் அவர்களுக்கும் என குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் அராஜகம், வன்முறை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்க நினைத்தால் ஏமர்ந்து போவீர்கள்.

 

மத வாத சக்திகளை எதிர்த்தே ஆக வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. தமிழக மக்கள் பொங்கி எழுந்தால் பொசுக்கப்படுவீர்கள். காமராஜர் பிறந்த நாள் கொண்டாடும் பாஜகவினர், பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போது அவரது வீட்டிற்கு தீவைத்தவர்கள் இவர்கள் என சாடினார். இன்று காமராஜரை புகழ்ந்து பேசுகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரி மூலம் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கஜானாவை நிரப்புகின்றனர். பால், நெய், தயிர், பென்சில் மீது வரி. தாய்பாலுக்கும் வரி போடுவார்கள். உரிய பாடத்தை கற்று தர வேண்டும். காங்கிரஸ் சர்வாதிகாரத்துடன் இருந்தால் எங்கோ டீ விற்ற மோடி பிரதமராக முடியுமா. காங்கிரஸ் கட்சி மீது கொச்சைப்படுத்தி விடலாம் என மோடி நினைக்கின்றார். நீங்கள் ஏன் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். நான் சிறுவர்களுக்கு பதில் சொல்வதில்லை என்றார்.

 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என நினைத்து செயல்படுகின்றனர். எந்த ஜென்மம் எடுத்தாலும் கவிழ்க்க முடியாது. ஸ்டாலினிடம் நீங்கள் தோற்று போவீர்கள். கருணாநிதியை விட மிகப்பெரிய சாணக்கியராக ராஜதந்திரியாக மு.க.ஸ்டாலின் உள்ளார். சோனியா, ராகுல் ஆகியோரை பயம் காட்ட விசாரணை என்ற பெயரில் மிரட்டினால் அவர்கள் பயந்து விடுவார்களா? உயிர் போனாலும் கவலை இல்லை என கூறும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

 

திமுக கூட்டணி வைத்து இருப்பது பதவி பெற இல்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றி ஆக வேண்டும் என்பதாற்காக என கூறிய அவர், காங்கிரஸ் கட்சியினர் காந்தி
வழியில் வந்தவர்கள் என்றாலும் சுபாஸ் சந்திரபோஸ் வழியிலும் வந்தார்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள். வன்முறை செய்தால் காங்கிரஸ் திருப்பி அடிப்பார்கள். புதிதாக வேட்டி கட்டி கொண்டவர்கள் அந்த எல்லையை மீறினால் அதற்கு சமமாக ஆயுதம் எடுக்க தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா

Gayathri Venkatesan

‘தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ – இந்திய வானிலை ஆய்வு மையம்

Arivazhagan Chinnasamy

ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

G SaravanaKumar